தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.

செவ்வாய், 15 ஏப்ரல், 2008

நான் பேசாவிடில்


நான் பேசுகிறேன்

நறுக்கப்படுகிறது என் நாவு

முகம் இழக்கின்றன என் சொற்கள்!


இன்னும் நான் பேசுகிறேன்

பறிக்கப்படுகிறது என் பேனா

கருச்சிதைகின்றன என் சொற்கள்!


ஆயினும் நான் பேசுகிறேன்

முறிக்கப்படுகின்றன என் விரல்கள்

விசையிழக்கின்றன என் சொற்கள்!


மேலும் நான் பேசுகிறேன்

பிடுங்கப்படுகின்றன என் கண்கள்

உயிர் இழக்கின்றன என் சொற்கள்!


பின்னும் நான் பேசுகிறேன்

உயிர் விடைக்க

என் உடலே சொல்லாய் எழுகிறது!


பேசாவிடில்

நான் சாவேன்!!.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2008

அ - ஆரம்பம்

ஓரு மலரைப் பறிப்பதுபோல்
பறித்தாலும் சரி!

ஓரு மிருகத்தை வெல்வதுபோல்
வென்றாலும் சரி!

ஒன்றுபோலவே இருக்கிறது
ஒரு அன்பைத் தொடர்வது!

- மனுஷ்ய புத்திரன்....